Text Box:
இஸ்லாமிய வழிகாட்டல் இணையத்தளம்   موقع دعوي إسلامي   Islamic Guidance Website   ඉස්ලාමීය මග පෙන්වීමේ වෙබ් අඩවිය

Unicode Fonts

News

Softwares

Text Box: © Moulaviyya  M.Y.  Maziyya B.A. (Hons)
Text Box: கேள்வி—பதில்
الفتاوى ( والأسئلة والأجوبة)

ஹதீஸ்                                      

நவ முஸ்லிம்கள்

ஐயமும் தெளிவும்

நேர்காணல்

மருத்துவம்

நூலறிமுகம்

போட்டிகள்

 உரைகள்

 பொதுவானவை

 பரிபாசை

கேள்வி—பதில்

الفتاوى ( والأسئلة والأجوبة)

 

கேள்வி – பதில் என்ற பகுதியினூடாக முஸ்லிம்களுடைய கேள்விகளுக்கு பதில் தர ஏற்பாடு செய்து வருகின்றோம். இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் முஹர்ரம் மாதம் ஆரம்பம் முதல் உங்களுடைய கேள்விகளையும், விமர்சனங்களையும், கருத்துக்களையும் அனுப்பி வைப்பதற்காக மின்னஞ்சல் முகவரியைத் தரவிருக்கின்றோம். இன்ஷா அல்லாஹ்.

 

முஸ்லிம்களுடைய கேள்விகளைப் பொறுத்தவரையில் ஏற்கனவே, நம்பகமான அறிஞர்களிடம் அவை கேட்கப்பட்டு, அவர்களால் அவற்றுக்கு (பத்வாக்கள்) மார்க்கத் தீர்ப்புக்கள் வழங்கப்பட்டிருந்தால் அந்த பதில்களை நேரடியாகவோ, அல்லது மொழியாக்கம் செய்தோ தருவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். ஏற்கனவே பத்வாக்கள் வழங்கப்படாத கேள்விகளுக்கு இஸ்லாமிய அறிஞர்களுடைய பத்வாக்களைப் பெற்றுத் தர முடிந்தவரை முயற்சி செய்வோம். ஒவ்வொரு  கேள்விக்கும் துறை சார்ந்த அறிஞர்களுடைய பத்வாக்களைப் பெற்றுத் தர நாடியுள்ளோம். அதற்கு முடியாமல் போனால் நேரடியாகக் கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சி செய்வோம்.

 

ஒரு முஸ்லிமின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்பான விவகாரங்களில் பயன்படும் வகையில் ஏற்கனவே இஸ்லாமிய அறிஞர்களால் வழங்கப்பட்டுள்ள பத்வாக்களும் இப்பகுதியில் தொடர்ந்தும் வெளிவரவுள்ளன. எமது திட்டமிடல் வெற்றிபெறவும், அதன் மூலம் இஸ்லாமிய உம்மத்தினரும், தமிழ் மற்றும் சிங்களம் கூறும் நல்லுலகமும் பலனடைய அல்லாஹ் உதவி செய்வானாக.

 

பிற மதத்தவரின் கேள்விகளும் பதில்களும்

أسئلة غير المسلمين والأجوبه عليها

 

        ஐயமும் தெளிவும் எனும் பகுதியில் மாற்று மத சகோதர சகோதரிகளுடைய இஸ்லாம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளோம். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி

 

manaruddawaorg@gmail.com

 

       இஸ்லாம் தொடர்பான மாற்று மதத்தவர்களுடைய கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும், சந்தேகங்களுக்கும் இஸ்லாமிய அறிஞர்கள் பதிலளித்துள்ளனர்.

 

       உங்களது கேள்விகளும் ஏற்கனவே பதில் கூறப்பட்டவைகளாக இருப்பின், அதே பதில்களை எமது இணையத் தளத்தினூடாக மீள் பிரசுரம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்.

 

        ஏற்கனவே, பதில் சொல்லப்படாத கேள்விகளாக அவை காணப்பட்டால், அவற்றுக்கு நாம் நேரடியாகவோ, அல்லது துறை சார்ந்த அறிஞர்கள் வழியாகவோ பதில்களைத் தரவுள்ளோம். ஆனால், கேள்விகள் தனிநபர்கள் தொடர்பானவைகளாகவோ,  அமைப்புக்கள் தொடர்பானவைகளாகவோ இருக்கக் கூடாது என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கு  அமைய உங்களுடைய கேள்விகளை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

 

செயற்குழு

 

 

எம்மைப் பற்றி

உரைகள்

தகவலிறக்கம்

ஆவணக் காப்பகம்

மென் பொருட்கள்