Text Box:
இஸ்லாமிய வழிகாட்டல் இணையத்தளம்   موقع دعوي إسلامي   Islamic Guidance Website   ඉස්ලාමීය මග පෙන්වීමේ වෙබ් අඩවිය

Unicode Fonts

News

Softwares

Text Box: © Moulaviyya  M.Y.  Maziyya B.A. (Hons)

 

நபி (ஸல்) அவர்களுடைய நபி மொழிகளை எடுத்துக் கூறும்போது நபி (ஸல்) அவர்கள்  கூறிய அதே வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்துவதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதற்கு முடியாத போது நபி மொழிகளின் உள்ளடக்கமும் அதன் கருத்தும் மாற்றமடையாதவாறு அவர்களுடைய கருத்தினை வெளிப்படுத்துவதில் தவறேதுமில்லை. நபிமொழிகளைப் பிறருக்கு எடுத்துச் சொல்வது ஒரு சிறந்த இபாதத்து ஆகும். இவ்வாறு நபிமொழிகளை எத்தி வைப்பவருக்காக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். அவர்கள் கூறினார்கள்:

 

ஒரு மனிதர் நம்மிடமிருந்து ஒரு செய்தியைக் கேட்டு, தான் கேட்டது போன்றே பிறருக்கும் அதனை எடுத்துக் கூறினால் அவருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக!

நூல் : அபூ தாவூத்: 3660, திர்மிதி: 2657, இப்னுமாஜா: 230

 

ஆகவே, ஒரு நபிமொழியை அது அறிவிக்கப்பட்டிருந்த அதே வார்த்தையில் எடுத்துக் கூறுவது மிகச் சிறந்த இபாதத்து ஆகும். இவ்வாறு நேரடியாக நபிமொழிகளை அது வந்திருக்கின்ற வார்த்தையில் எடுத்துச் சொல்ல முடியாதபோது, அவைகளுடைய உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அவைகளை எடுத்துக் கூற அனுமதியுண்டு. ஆனால், அதற்கு இரு நிபந்தனைகள் இருப்பதாக இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். அவையாவன :

 

1. அறபு மொழியறிவு உள்ளவராக இருத்தல்.

2. நபிமொழிகளுடைய பொருளடக்கத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவராக இருத்தல்.

 

இவ்விரு நிபந்தனைகளுக்கும் உற்படாதோர், ஹதீஸ்களை அவற்றின் கருத்துக்களின் அடிப்படையில் வெளிப்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஏனெனில், மேற்கூறப்பட்ட இரு நிபந்தனைகளுக்கும் உற்படாதோர், கருத்துக்களின் அடிப்படையில் நபிமொழிகளை எடுத்துக் கூற முற்படும்போது, இவர்கள் மூலம் நபி (ஸல்) அவர்கள் கூறாத ஒரு செய்தி அவர்கள் மீது இட்டுக் கட்டப்படுகின்ற வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றது. இதனால்தான் சில அறிஞர்கள் இந்த முறையில் நபிமொழிகளை எடுத்துக் கூறுவதைத் தடை செய்துள்ளனர். ஹதீஸ் பற்றிய அறிஞர்களது இக்கருத்து நடைமுறையில் செயற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அப்போது நபிமொழிகளின் தனித்துவம் மேன்மேலும் அதிகமாகப் பேணிப் பாதுகாக்கப்பட்டிருக்கும். இவர்களுடைய இந்தக் கருத்து செயற்படுத்தப்படாமையின் காரணமாகவே நபிமொழிகளை எடுத்துக் கூறுவதில் ஓர் அலட்சியத் தன்மை மிக அதிகமானோரிடம் காணப்படுகின்றது. எனவே, அதிகமானோர் கருத்துக்களின் அடிப்படையில் ஹதீஸ்களை எடுத்துக் கூறத் துணிந்து விட்டனர். இதனால் தப்பும் தவறுமாக நபிமொழிகளைக் கையாளுகின்ற வழமை மிக அதிகளவில் காணப்படுகின்றது.

 

நபித் தோழர்களான இப்னு மஸ்ஊத் (ரழி), அபுத்தர்தா (ரழி), அனஸ் (ரழி) போன்ற பெரும், பெரும் நபித் தோழர்களே நபிமொழிகளைக் கையாள்வதில் அதிக பேணுதலுடன் நடந்து கொண்டுள்ளனர். எவ்வாறெனில், இவர்கள் நபிமொழிகளைக் கூறி முடித்துவிட்டு, பேணுதலுக்காக, ‘இது போன்றதொரு வாசகத்தைத்தான் நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்தினார்கள்என்ற பொருள்படக் கூடிய கமாகாலஎன்ற வார்த்தைகளைக் கூறுவார்கள்.

 

எனவே, நபிமொழிகளைக் கையாளும்போது மேற்படி ஒழுங்கையும், பேணுதலையும் கையாண்டு, நபி (ஸல்) அவர்களுடைய வழிமுறையை எடுத்துக் கூறிய நன்மையை அடைந்து கொள்வோமாக!

 

 

 

 

ஹதீஸ்களைக் கையாளும்போது ..

رواية الحديث بالمعنى

மௌலவி எம். எம். ஸகி B.A. (Hons) மதீனா

எம்மைப் பற்றி

உரைகள்

தகவலிறக்கம்

ஆவணக் காப்பகம்

மென் பொருட்கள்