Text Box:
இஸ்லாமிய வழிகாட்டல் இணையத்தளம்   موقع دعوي إسلامي   Islamic Guidance Website   ඉස්ලාමීය මග පෙන්වීමේ වෙබ් අඩවිය

Unicode Fonts

News

Softwares

Text Box: © Moulaviyya  M.Y.  Maziyya B.A. (Hons)
Text Box: நற்குணங்கள்
الأخلاق الحسنة
மௌலவியா எம். வை. மஸிய்யா B.A. (Hons)

ஹதீஸ்                                      

இஸ்லாமிய வரலாறு

அழைப்புப் பணி

குடும்பவியல்

முஸ்லிம் பெண்

இஸ்லாமிய உலகம்

இஸ்லாம் அறிமுகம்

நவ முஸ்லிம்கள்

ஐயமும் தெளிவும்

நேர்காணல்

மருத்துவம்

நூலறிமுகம்

போட்டிகள்

 உரைகள்

 பொதுவானவை

 பரிபாசை

Text Box: Download  _PDF

 

நற்குணம் என்பது துர்க்குணம் என்ற பதத்தின் எதிர்ச் சொல்லாகும். அறிஞர்கள் அதற்குக் கீழ்வருமாறு வரைவிலக்கணம் தருவர்.

 

நற்குணம் என்பது: நன்மை செய்வதும், தீங்கு இழைக்காது தவிர்ந்து நடப்பதும், பிறரால் ஏற்படுகின்ற தீங்குகளைப் பொறுமையுடன் எதிர்கொள்வதுமாகும்.

 

இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) கூறுவதாவது: நற்குணங்கள் 4 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு உள்ளன. அவை வருமாறு:

 

1. பொறுமை

2. பேணுதல்

3. வீரம்

4. நேர்மை

 

மேற்படி 4 அம்சங்களையும் ஏற்று நடக்காத ஒருவரால் நன்னடத்தையுடையவராக இருக்க முடியாது.

(இப்னுல் கையிம்: மதாரிஜுஸ் ஸாலிகீன் 2:294)

 

இமாம் ஸஃதி (ரஹ்) கூறுவதாவது: நற்குணம் என்பது சிறந்த நன்னடத்தையாகும். பொறுமை, சாந்தம், நன்னடத்தைகளை ஏற்று நடக்கும் ஆர்வம் ஆகியன நற்குணத்தின் அடிப்படைகளாகும். மன்னிக்கும் மனப்பான்மை, தீங்கிழைத்தோரை மன்னித்துப் படைப்பினங்களுக்கு நன்மை செய்தல் ஆகியன நற்குணத்தின் வெளிப்பாடுகளாகும்.

 

ஆகவே, நற்குணம் என்பது பிறருடைய தீங்குகளைப் பொறுமையுடன் ஏற்று நடப்பதும், தீங்கிழைப்போரை மன்னித்து அவர்களுக்கு நன்மையை நாடுவதுமாகும். இவையனைத்தையும் அல்லாஹ் ஒரே வசனத்தில் ஒன்று சேர்த்து கீழ்வருமாறு குறிப்பிடுகிறான்.

 

خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ

 

நபியே!) நீர் மன்னிப்பை எடுத்துக் கொள்வீராக! நன்மையை ஏவியும் வருவீராக! அறிவீனர்களைப் புறக்கணித்தும் விடுவீராக! (அல்-அஃராப் - 199)

(நூல்: ஸஃதி, அர்ரியாழுந் நாளிரா: 68)

 

 

எம்மைப் பற்றி

உரைகள்

தகவலிறக்கம்

ஆவணக் காப்பகம்

மென் பொருட்கள்