Text Box:
இஸ்லாமிய வழிகாட்டல் இணையத்தளம்   موقع دعوي إسلامي   Islamic Guidance Website   ඉස්ලාමීය මග පෙන්වීමේ වෙබ් අඩවිය

Unicode Fonts

News

Softwares

Text Box: © Moulaviyya  M.Y.  Maziyya B.A. (Hons)
Text Box: உளத்தூய்மை - 1
الإخلاص(1)
மௌலவியா எம். வை. மஸிய்யா B.A. (Hons)

ஹதீஸ்                                      

இஸ்லாமிய வரலாறு

அழைப்புப் பணி

குடும்பவியல்

முஸ்லிம் பெண்

இஸ்லாமிய உலகம்

இஸ்லாம் அறிமுகம்

நவ முஸ்லிம்கள்

ஐயமும் தெளிவும்

நேர்காணல்

மருத்துவம்

நூலறிமுகம்

போட்டிகள்

 உரைகள்

 பொதுவானவை

 பரிபாசை

Text Box: Download  _PDF

        வணக்க வழிபாடுகள் அனைத்தும் உள்ளத்தாற் செய்யப்படும் வணக்கமென்றும் உடலாற் செய்யப்படும் வணக்கமென்றும் இரு வகைப்ப்படும். உள்ளத்தால் நிறைவேற்றப்படும் வணக்கங்களில் முதன்மையானது உளத் தூய்மையாகும். ஏனெனில் உளத் தூய்மையே அனைத்து விதமான வணக்க வழிபாடுகளினதும் உயிர் நாடியாகக் கருதப்படுகிறது. உளத் தூய்மை கெட்டு விட்டால் அனைத்து விதமான வணக்க வழிபாடுகளும் பலனற்றதாக மாறிவிடும். எனவே, எல்லா விடயங்களையும் கற்றுக்கொள்வதற்கு முன் உளத் தூய்மையைப் பற்றி அறிந்து கொள்வது அனைவர் மீதும் கடமையாகும்.

       உளத் தூய்மை பற்றி அறிந்து அதன்படி செயற்படாவிடின் நற் செயல்கள் புரிவதில் எவ்விதப் பயனுமில்லை. இதனாற்றான் சிலர் அதிகமான நற் செயல்களில் ஈடுபட்டபோதினும் அவர்கள் உலகில் வெறுங் கஷ்டத்திற்கும் கவலைக்குமே உட்படுகின்றனர்; மறுமையில் அதன் பயனாகத் தண்டனைக்காளாவர். எனவேதான், உளத் தூய்மையைப் பற்றி அறிந்து கொள்வது மிக மிக அவசியமாகின்றது.

நல்லறங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு உளத் தூய்மை வேண்டும்

        எந்தவொரு நல்லறமும் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு அவற்றில் இரு பிரதானமான விடயங்கள் இருப்பது அவசியமாகும். இவ்விரு விடயங்களும் காணப்படாத எந்தவொரு நல்லறமும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அவையாவன:

¨ நல்லறங்களில் ஈடுபடுவோன் அல்லாஹ்வுக்காக என்ற ஒரே நோக்கத்துடன் ஈடுபடல் வேண்டும்.

¨ அல்லாஹ் தனது திருமறையில் அல்லது இறைத் தூதர் (ஸல்) அவர்கள் தமது வழிமுறையில் விளக்கிய அடிப்படையில் நல்லறங்கள் அமைய வேண்டும்.

        இவ்விரண்டும் நல்லறங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகளாகும். இந்நிபந்தனைகளில் ஒன்றையேனும் ஒரு கருமம் இழக்கின்றபோது அது நல்லறமாகக் கருதப்பட மாட்டாது. அவ்வாறே, அது ஏற்றுக்கொள்ளப்படவும் மாட்டாது. இதனையே கீழ்வரும் வசனம் தெளிவுபடுத்துகிறது. அல்லாஹ் கூறுகிறான்,

فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا

       எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கிறானோ அவன் நல்லறங்களைச் செய்து தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதுமிருப்பானாக” (அல்-கஹ்ப்: 110). இவ்வசனத்திலே அல்லாஹ், ஒரு மனிதன் செய்யும் செயல் நல்லறமாக மாறுவதற்கு அது ஷரீஆவிற்கு முரணற்றதாக அமைய வேண்டுமென்று முதலிற் குறிப்பிடுகிறான். பின்பு, அக்கருமத்தை மேற்கொள்பவன் அதன் மூலம் அல்லாஹ்வைத் தவிர்ந்த வேறு யாரையும் நாடாது அல்லாஹ்வுக்காக மாத்திரமே அதனைச் செய்வதாகத் தான் செய்யும் செயலைத் தூய்மையானதாக ஆக்க வேண்டுமென்று குறிப்பிடுகிறான்.

     மேற்கூறப்பட்ட திருக்குர்ஆன் வசனம் தொடர்பாக இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் தமகு விரிவுரையிற் பின்வருமாறு கூறுகிறார்கள், “இவையிரண்டும் நற் செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான இரு தூண்களாகும். எனவே, அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணம் இருப்பதும், இறைத் தூதர் (ஸல்) கொண்டுவந்த மார்க்கத்தின் அடிப்படையிலும் நற் செயல்கள் அமைவது அவசியமாகும்”. இதே கருத்தையே காழி இயாழ் (ரஹ்) உட்படப் பல இஸ்லாமிய அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உளத்தூய்மையுடன் செயற்படுவதும் முகத்துதியிலிருந்து தவிர்ந்து நடத்தலும்

       எந்தவொரு நற் செயலையும் செய்வதற்கு முன்னராக அதை நிறைவேற்றும் எண்ணம் உள்ளத்திலிருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “செயல்கள் அனைத்தும் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனதனுக்கும் அவர் நாடியதுதான் கிடைக்கும். எவரது ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும் அவனது தூதருக்காகவும் ஆகிறதோ, அவரது ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும் அவனது தூதருக்காகவும் ஆகிவிடும். எவரது ஹிஜ்ரத் அவர் அடைந்து கொள்ளும் உலகிற்காக அல்லது அவர் மணமுடிக்க விரும்பும் பெண்ணிற்காக ஆகிவிடுகிறதோ, அவரது ஹிஜ்ரத் அவர் எதற்காக ஹிஜ்ரத் செய்தாரோ அதற்காகவே அமையும்” [அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: முஸ்லிம், 01].

     உள்ளத்தால் நாடும் எண்ணங்கள் அல்லாஹ்வுக்காகவென்று மாத்திரமே அமைய வேண்டும். அல்லாஹ் தன் திருமறையில் இதனைப் பின்வருமாறு கூறுகிறான்,

وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ

      அல்லாஹ்வுக்கு வணக்கத்தைத் தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகிச் சரியான வழியிற்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும். மேலும், தொழுகையை அவர்கள் நிலைநாட்ட வேண்டும். மேலும், ஸகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்” [அல்-பய்யினா: 05].

قُلْ إِن تُخْفُواْ مَا فِي صُدُورِكُمْ أَوْ تُبْدُوهُ يَعْلَمْهُ اللّهُ وَيَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ وَاللّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

       (நபியே!) நீர் கூறும்: உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான்; இன்னும் வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான்; அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்” [ஆல இம்றான்: 29].

      இவ்வாறே முகத்துதியை விட்டும் இறைவன் மனிதர்களைப் பலவாறு எச்சரிக்கை செய்துள்ளான். இதனாலேயே, முகத்துதியை இணை வைப்பின் வகையைச் சார்ந்தது என்று இஸ்லாம் கூறுகின்றது. இதனாற்றான் நற் செயல்களில் முகத்துதி கலப்பதை இறைவன் தன் திருமறையில், ஷிர்க் – இணை வைத்தல் என்பதாகக் கூறி மனிதனை வன்மையாக எச்சரிக்கிறான். இதனையே இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:

وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

      அன்றியும், உமக்கும் உமக்கு முன்னிருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், ‘நீவிர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைந்தவர்களாகி விடுவீர்கள்’ (என்பதுவே யாகும்)” [அஸ்-ஸுமர்: 65]. நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காகத் தாம் தல்பியா சொல்லும்போது “இறைவனே! முகத்துதியும் உலகப் புகழ்ச்சியுமற்ற ஒரு ஹஜ்ஜாக எனது ஹஜ்ஜை ஆக்குவாயாக!” என்று கூறினார்கள் [ஸஹீஹுல் ஜாமிஃ: 1302].

      இறைத் தூதர் (ஸல்) அவர்கள் முகத்துதியைப் பற்றி மனிதர்களை மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள். இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதைத் தாம் செவியுற்றதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,

         மறுமை நாளில் மக்களில் முதன் முதலாகத் தீர்ப்பு வழங்கப்படுபவன் அல்லாஹ்வின் பாதையில் தன்னுயிரைத் தியாகம் செய்த ஒரு மனிதனாவான். அவன் (அல்லாஹ்விடம்) அழைத்துவரப்படுவான். இறைவன் அவனுக்களித்த அருட் கொடைகளை அடையாளங் காட்டுவான். அவ்வாறே அவற்றை அவனும் இனங் கண்டு கொள்வான். (அப்போது) இறைவன் அவனிடம் ‘அவற்றைக் கொண்டு நீ என்ன நல்லறம் செய்தாய்’ என்று வினவுவான். அப்போதவன், ‘நான் உயிர்த் தியாகம் செய்யும் வரை உனக்காகவே போராடினேன்’ என்பான். அப்போதிறைவன் அவனிடம் ‘நீ பொய்யுரைத்து விட்டாய். மாறாக, நீயோ பெரும் வீரன் என்று சொல்லப்படுவதற்காகவே போராடினாய்; அவ்வாறே சொல்லப்பட்டுவிட்டாய்’ என்று கூறுவான். பின்னர் அவனை முகங் குப்புற வீழ்த்தி இழுத்துச் சென்று நரகிற் போடும்படி கட்டளையிடப்படும்.

        மேலும், கல்வியைக் கற்று, அதனைப் பிறருக்கும் கற்பித்து, அல்-குர்ஆனையும் ஓதிவந்த ஒரு மனிதன் தீர்ப்பு வழங்கப்படுவான். அவன் (அல்லாஹ்விடம்) அழைத்து வரப்படுவான். (இறைவன்) அவனுக்களித்த அருட் கொடைகளை அடையாளம் காட்டுவான். அவற்றை யவனும் இனங் கண்டு கொள்வான். அப்போதிறைவன் அவனிடம், ‘அவற்றைக் கொண்டு நீ என்ன நல்லறஞ் செய்தாய்’ என்று வினவுவான். அதற்கவன், ‘நான் கல்வியைக் கற்று, அதனைப் பிறருக்கும் கற்றுக் கொடுத்தேன். மேலும் உனக்காகவே அல்-குர்ஆனையும் ஓதினேன்’ என்று கூறுவான். அப்போதிறைவன் அவனிடம், ‘நீ பொய்யுரைத்துவிட்டாய். மாறாக, நீயோ அறிவாளியென்று கூறப்படுவதற்காகக் கல்வி கற்றாய்; மேலும், (நன்றாகக்) குர்ஆன் ஓதக் கூடியவனென்று கூறப்படுவதற்காக அல்-குர்ஆனை ஓதினாய். அவ்வாறே சொல்லப்பட்டுவிட்டாய்’ என்று கூறுவான். பின்னர் அவனை முகங் குப்புற வீழ்த்தி இழுத்துச் சென்று நரகிற் போடும்படி கட்டளையிடப்படும்.

        மேலும், அல்லாஹ் ஒரு மனிதனுக்கு விசாலமாக்கிக் கொடுத்து, பல்வகைச் செல்வங்களும் வழங்கப்பட்ட ஒரு மனிதன் தீர்ப்பு வழங்கப்படுவான். அவன் (அல்லாஹ்விடம்) அழைத்து வரப்படுவான். (இறைவன்) அவனுக்களித்த அருட் கொடைகளை அடையாளம் காட்டுவான். அவற்றை அவனும் இனங்கண்டு கொள்வான். அப்போதிறைவன் அவனிடம், ‘அவற்றைக் கொண்டு நீ என்ன நல்லறம் செய்தாய்’ என்று வினவுவான். அதற்கவன், ‘எவ்வழிகளிலெல்லாம் செலவளிக்கப்படுவதை நீ விரும்புகிறாயோ, அவ்வழிகள் அனைத்திலும் உனக்காகவே செலவளிக்காது விட்டுவிடவில்லை’ என்று கூறுவான். அப்போதிறைவன் அவனிடம், ‘நீ பொய்யுரைத்துவிட்டாய். மாறாக, நீயோ கொடை வள்ளல் என்று கூறப்படுவதற்காகவே அவ்வாறு செய்தாய். அவ்வாறே சொல்லப்பட்டுவிட்டாய்’ என்று கூறுவான். பின்னர் அவனை முகங் குப்புற வீழ்த்தி இழுத்துச் சென்று நரகிற் போடும்படி கட்டளையிடப்படும்” [நூல்: முஸ்லிம்].

         இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “மேலான அல்லாஹ் கூறினான், ‘எனக்கு இணையாக ஆக்கப்பட்டவர்களின் இணையை விட்டும் நான் தேவையற்றவன். எவர் ஒரு வணக்கத்தைச் செய்து அதில் என்னுடன் பிறரைக் கூட்டாக்கி விடுகிறாரோ, நான் அவரையும் அவரால் எனக்கு இணையாக ஆக்கப்பட்டவர்களையும் விட்டு விலகிவிடுவேன்’” [ஹதீஸுல் குத்ஸி: முஸ்லிம்].

         மேலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “மிக்க மேலான, மிக்க கண்ணியமான அல்லாஹ்வின் திருமுகத்தை மாத்திரம் நாடிக் கற்கப்பட வேண்டிய கல்வியை ஒருவன் உலக நோக்கங்களில் ஏதாவதொன்றை அடைவதற்காகக் கற்றால், அவன் மறுமை நாளில் சுவர்க்கத்தின் வாடையையேனும் நுகர மாட்டான்” [நூல்: அபூ தாவூத், ஜாமிஉஸ் ஸஹீஹ் - 9159]. ஷைத்தானை விட்டும் எச்சரிக்கையாக இருப்பதும், அவனது சூழ்ச்சிகளைத் தெளிவாக அறிந்திருப்பதும் அவசியமாகும்.

         முகத்துதியானது, இணை வைத்தலின் வகையைச் சார்ந்தது என்பதிலிருந்து அதன் விபரீதம் தெளிவாகின்றது. அது நல்லறங்களை வீணடித்துவிடக் கூடியது என்பதனால் ஒரு முஸ்லிம் எப்போதும் தனதுள்ளத்தில் முகத்துதி நுழைந்துவிடாமற் பார்த்துக் கொள்வது அவசியமாகும். இது உள்ளத்தை மாசு படுத்துகின்ற, பலவீனப்படுத்துகின்ற உள நோய்களில் ஒன்றாகும். எனவே, இம்முகத்துதி மனித உள்ளத்திற் தோன்றுவதற்கான காரணங்களை அறிந்து கொள்வது கட்டாயமாகும். إِنَّ الشَّيْطَانَ لَكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوهُ عَدُوًّا

     நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான். அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள்” [அல்-பாதிர்: 06].    الشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ وَيَأْمُرُكُم بِالْفَحْشَاءِ

       ஷைத்தான் உங்களுக்கு வறுமையை வாக்களிக்கிறான். மேலும், மானக் கேடானவற்றையே உங்களுக்கு அவன் ஏவுகிறான்” [அல்-பகறா: 268].    إِنَّ الشَّيْطَانَ لِلإِنسَانِ عَدُوٌّ مُّبِينٌ

     ‘(ஏனெனில்) நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான விரோதியாக இருக்கிறான்’ என்று (யஃகூப் நபியாகிய அவர்) கூறினார்” [யூஸுப்: 05].

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ وَمَن يَتَّبِعْ خُطُوَاتِ الشَّيْطَانِ فَإِنَّهُ يَأْمُرُ بِالْفَحْشَاءِ وَالْمُنكَرِ

        விசுவாசங் கொண்டோரே! ஷைத்தானுடைய அடிச் சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்; எவன் ஷைத்தானின் அடிச் சுவடுகளைப் பின்பற்றுகிறானோ, அவனை மானக் கேடானதைக் கொண்டும் வெறுக்கப்பட்டதைக் கொண்டும் நிச்சயமாக அவன் ஏவுவான்” [அந்-நூர்: 21].

       மனிதர்களை வழிகெடுக்க நாடும் ஷைத்தான், தீய செயல்களை மனிதர்களுக்கு அழகுபடுத்திக் காட்டுவான். மேலும், அவர்களை நல்வழியை விட்டும் திசை திருப்பித் தீய வழியின்பாற் கவரச் செய்வான்

நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள், “நிச்சயமாக ஷைத்தான் ஒவ்வொருவரும் உணவு உண்ணும் சந்தர்ப்பம் முதல் அனைத்துக் காரியங்களிலும் ஆஜராகின்றான். எனவே, எவருடைய உணவுக் கவளமாவது கீழே விழுந்து விட்டால் அதிற் படிந்திருப்பதை நீக்கிவிட்டு அதை அவர் சாப்பிட்டுக் கொள்ளட்டும். ஷைத்தானுக்கு அதனை விட்டுவிட வேண்டாம். சாப்பிட்டு முடித்து விட்டால் விரல்களைச் சூப்பிக் கொள்ளட்டும். உணவில் எப்பகுதியில் பறகத் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியாது” [ரியாளுஸ் ஸாலிஹீன்: 752].

       இந் நபிமொழியில் ‘நிச்சயமாக ஷைத்தான் உங்களது அனைத்து செயல்களிலும் சமுகமளிக்கின்றான்’ என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. இதன் விளக்கமானது, ‘ஷைத்தான் மனிதனது எண்ணம், சொல், செயல் என்ற அனைத்து விடயங்களையும் பாழ்படுத்தி வீணாக்கிவிடவே சமுகமளிக்கிறான்’.

      அதாவது, எண்ணம் சிறந்து விட்டால் அதன் மூலம் நற் செயல் செய்வதற்கு மாறாக ஷரீஆவில் அனுமதிக்கப்படாத ஒரு செயலைச் செய்ய மனிதனைத் தூண்டுவான். ஒரு நற் செயலைச் செய்ய முனையும் போது மனிதனது எண்ணத்தைத் தூய்மை அற்றதாக்கிவிடுவான். எண்ணமும் செயலும் சிறந்துவிடும்போது வேறொரு விதமாக மனிதனிடம் சமுகமளிப்பான். மக்களுடன் பழகும்போது மனிதன் பழகுகின்ற பாங்கினை மோசமானதாக அமைத்து, அவனுக்கும் ஏனைய மனிதர்களுக்கு மிடையில் பகைமையையும் கோபத்தையும் ஏற்படுத்திவிடுவான்.

      இவ்வாறு தன்னாலான சகல யுக்திகளையும் பயன்படுத்தி மனிதர்களது செயல்களை வீணாக்கி அவர்களுக்கு அல்லாஹ்வின் அருள் கிடைக்காதிருக்க அயராது பாடுபடுவான். இதனையே நபி (ஸல்) அவர்களின் பின்வரும் நபிமொழி குறிப்பிடுகின்றது. “‘உங்களில் ஒவ்வொருவரும் ஜின்களில் ஒரு கூட்டாளனும் மலக்குகளில் ஒரு கூட்டாளனும் இணைக்கப்படாமல் இல்லை’ என்று நபியவர்கள் கூறியபோது ‘உங்களுக்குமா’ என்று கேட்கப்பட ‘ஆம் எனக்கும்தான். எனினும், நிச்சயமாக இறைவன் அவனுக்கு எதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். இதற்கு அவன் கட்டுப்பட்டுவிட்டான். எனவே, அவன் எனக்கு நல்லவற்றை மாத்திரமே ஏவுவான்’ என்று பதிலுரைத்தனர்” [நூல்: ஸஹீஹுல் ஜாமிஃ - 5800].

       

                                                                                                                                                    Page –2     (தொடரும்)

 

எம்மைப் பற்றி

உரைகள்

தகவலிறக்கம்

ஆவணக் காப்பகம்

மென் பொருட்கள்