Text Box:
இஸ்லாமிய வழிகாட்டல் இணையத்தளம்   موقع دعوي إسلامي   Islamic Guidance Website   ඉස්ලාමීය මග පෙන්වීමේ වෙබ් අඩවිය

Unicode Fonts

News

Softwares

Text Box: © Moulaviyya  M.Y.  Maziyya B.A. (Hons)
Text Box: பிள்ளைகளை நன்னெறிப்படுத்துவதன் முக்கியத்துவம்
أهمية تربية الأولاد في نظر الشريعة
மௌலவியா எம். வை. மஸிய்யா B.A. (Hons)

ஹதீஸ்                                      

இஸ்லாமிய வரலாறு

அழைப்புப் பணி

குடும்பவியல்

முஸ்லிம் பெண்

இஸ்லாமிய உலகம்

இஸ்லாம் அறிமுகம்

நவ முஸ்லிம்கள்

ஐயமும் தெளிவும்

நேர்காணல்

மருத்துவம்

நூலறிமுகம்

போட்டிகள்

 உரைகள்

 பொதுவானவை

 பரிபாசை

Text Box: Download  _PDF

        புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே. ஸலவாத்தும் ஸலாமும் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவரது குடும்பத்தினர், தோழர்கள் மற்றும் அவரின் வழிமுறையை இன்று வரை ஏற்று நடக்கின்ற அனைவர்மீதும் உண்டாவதாக!

அல்லாஹ் தனது அடியார்களுக்குத் திருமணத்தை அனுமதித்து, அதனை இபாதத்தாகவும் ஆக்கியுள்ளான். இது அவனது கருணையின் அத்தாட்சிகளில் ஒன்றாகும். அல்லாஹ் கூறுகின்றான்:

وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً ۚ إِنَّ فِي ذَ‌ٰلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ

நீங்கள் மனைவியர்களிடம் அமைதி பெறுவதற்காக, உங்களில் இருந்தே உங்களுக்காக அவன் அவர்களைப் படைத்திருப்பதும், மேலும் அவன், உங்களுக்கிடையே அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளவையாகும்.

                                                                                                                                 (அர்ரூம் : 21)

ஆகவே, இஸ்ஸாமியக்குடும்ப அமைப்பானது அன்பு, இரக்கம், கருணை ஆகிய சிறந்த அடிப்படைகள் மற்றும் பண்பாடுகள் மீது அமைந்ததாகும். இந்த இஸ்லாமியக் குடும்பம் மிகச் சிறப்பாக அமைந்திட வேண்டும் என்பதற்காக, அதனுடைய ஆரம்ப உறுப்பினர்களான கனவன் மனைவி ஆகிய இருவரில் ஒவ்வொருவர் மீதும் அல்லாஹ் உரிமைகளையும் கடமைகளையும் வைத்துள்ளான். அல்லாஹ் கூறுகின்றான்:

وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ ۚ وَلَا يَحِلُّ لَهُنَّ أَنْ يَكْتُمْنَ مَا خَلَقَ اللَّهُ فِي أَرْحَامِهِنَّ إِنْ كُنَّ يُؤْمِنَّ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۚ وَبُعُولَتُهُنَّ أَحَقُّ بِرَدِّهِنَّ فِي ذَ‌ٰلِكَ إِنْ أَرَادُوا إِصْلَاحًا ۚ وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ ۚ وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌ ۗ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ

(மனைவியர்களாகிய) இவர்கள் மீது முறைப்படி கடமைகள் இருப்பது போலவே இவர்களுக்கான உரிமைகளும் இருக்கின்றன. ஆயினும் ஆண்களுக்கு அவர்களை விட ஒரு படி உயர்வு உண்டு.

                                                                                                                          (அல் பகரா : 228)

ஆகவே ஒரு குடும்பம் – கனவன் மனைவி பரஸ்பரம் உரிமைகளையும், கடமைகளையும் மாத்திரம் பேணுவதோடு மாத்திரம் நிறுத்திக் கொள்ளாது எப்போதும் விட்டுக்கொடுக்கின்ற மனப்பான்மை, ஒருவர் மற்றவர் மீதான நல்லெண்ணம் போன்ற பாரிய பண்பாடுகளைக் கொண்டு அமைகின்ற போது அது இஸ்லாமிய சமூக அமைப்புக்கு மென்மேலும் மெருகூட்டுகின்றது.

இவ்வாறான குடும்பவாழ்க்கைக்கு பல பலன்கள் இருக்கின்றன. அவற்றில் பிரதானமானது குழந்தைச் செல்வமாகும்.

குழந்தைகள், அல்லாஹ் தருகின்ற அருட்கொடைகள் ஆகும். இதற்காக மனிதன் இறைவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்படுகின்றான்., அவ்வாறே அவர்களை சரியான முறையில் வளர்த் தெடுப்பதும், பாதுகாப்பதும் பெற்றோர் மீதுள்ள கடமைகளாகும்.

குழந்தைகள் மிகச்சரியான, தெளிவான மன நிலையோடு பிறக்கின்றன. இதனால் நல்லதையும் கெட்டதையும் ஏற்றுக் கொள்கின்ற இயல்பு நிலை குழந்தைகளிடம் காணப்படுவதுண்டு. எனவே, பெற்றோர் எவற்றையெல்லாம் சரியானதென்றும் நல்லதென்றும் குழந்தைகளுக்குக் காட்டிக் கொடுக்கின்றனரோ அவற்றை குழந்தைகள் அப்படியே ஏற்று நடக்கின்றன. இதனால் தான்  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எல்லாக் குழந்தைகளுமே (இயற்கையில் மார்க்கத்தை ஏற்றுக் கொள்கின்ற) இயல்புடன் பிறக்கின்றன. பெற்றோர்கள் தான் குழந்தைகளை (ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொள்கின்ற இயல்பான நிலையிருந்து திருப்பி) யூதர்களாகவோ, கிருத்தவர்களாகவோ, அக்னி ஆராதனையாளர்களாகவோ ஆக்கிவிடுகிறார்கள்.

இதை அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்துவிட்டுப் பிறகு, நீங்கள் விரும்பினால்

 

فَأَقِمْ وَجْهَكَ لِلدِّينِ حَنِيفًا ۚ فِطْرَتَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا ۚ لَا تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ ۚ ذَ‌ٰلِكَ الدِّينُ الْقَيِّمُ وَلَـٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ

"இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம், இதன் மீதே மனிதர்களை அல்லாஹ் படைத்துள்ளான். அல்லாஹ்வின் படைப்பில் எந்த மாற்றமும் இல்லை.

(அர்ரூம் : 30) எனும் வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்" என்றார்கள்.

                                                                                                   நூல் : புகாரி : 1358, 1359, 1385

                                                                                                                    முஸ்லிம் : 5166, 5169

 

ஆகவே, இஸ்லாமிய உம்மத் ஒரு தனித்துவம்மிக்க வாழ்க்கை வழிகாட்டியைக் கொண்டுள்ளது. அதற்கு மிக உயர்ந்த நோக்கங்களும், இலட்சியங்களும் இருக்கின்றன. அவற்றை உலகில் அடைவதற்காகவே எப்போதும் முயற்சி செய்கின்றது. அதே போன்று இந்த இஸ்லாமிய உம்மத்தின் மீது பாரிய கடமைகளும் இருக்கின்றன. அவற்றை அமுல் படுத்துவதற்காக அது உழைக்கின்றது.

ஆகவே, இஸ்லாமிய வாழ்க்கை வழிமுறை முக்கியமான பல அடிப்படைகளைக் கொண்டுள்ளது. இவற்றை வேறு எந்த மார்க்கத்திலோ மனிதன் இயற்றிய சித்தாந்தங்களிலோ காணமுடியாது. இவற்றில், இளம் தலைமுறையினரான குழந்தைகளை சிறந்த முறையில் நன்னெறிப் பயிற்சியூட்டி வளர்த்தெடுப்பதற்கு இஸ்லாம் காட்டித் தந்திருக்கின்ற வழிகாட்டுதல்கள் மிகப்பிரதானமானவையாகும்.

மனிதன் படைக்கப்பட்டதற்குரிய முக்கியமான இலட்சியத்தை, சிறுவயது முதல் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்க வேண்டும். அதுதான் அல்லாஹ்வை வணங்கி வழிபடுதலாகும். இபாதத் என்பது இப்புவியின் மீது மனிதன் மேற்கொள்கின்ற அனைத்துச் செயற்பாடுகளயும் உள்ளடக்கிக்கொள்கின்ற மிக விரிவானதொரு அம்சமாகும்.

இதன் அடிப்படையில், ஒரு சிறுவன் தனது வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் மிகச் சரியான முறையில் வழிகாட்டப்பட்டு நன்னெறிப் படுத்தப்படுகின்றபோது, அல்லாஹ் பூமியில் அவனைத் தனது பிரதி நிதியாக ஆக்கி, தன்மீது சுமத்தியுள்ள அமானிதத்தின் எல்லாத் துறைகளையும் சுமந்து செயல்படுவதற்குச் சக்தியுள்ள ஒரு தனிமனிதனாக மாறுகின்றான். எனவே, குழந்தைகளுக்கு மிகச் சரியான இஸ்லாமிய நன்னெறிப்பயிற்சியை ஊட்டுவதன்மூலம் மாத்திரமே, அல்லாஹ்வின் சட்டங்களை நடைமுறைப் படுத்தி இஸ்லாத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பமுடியும்.

இந்த மானிடத்துக்கு அல்லாஹ் வழங்கியுள்ள வழிகாட்டலானது மனிதனது அன்றாட வாழ்வின் எல்லாத் துறாகளையும், மனிதனுடைய அனைத்துச் செயற்பாடுகள் மற்றும் விவகாரங்களையும் உள்ளடக்கி நிற்பது அதற்குரிய மிக முக்கியமான தனித்துவங்களில் ஒன்றாகும். ஆகவே, இஸ்லாமிய பண்பாட்டுத்துறையிலும், ஆன்மீகத் துறையிலும் தாக்கம் செலுத்தாத வெளுமனே வணக்க வழிபாடுகளும், சட்டவிதிகளும் மாத்திரமல்ல. மாறாக அது  ஆன்மீகம், லௌகீகம் ஆகிய இரு துறைகளுக்குமான அடிப்படைகளைப் பொதிந்து நிற்கிறது. மனிதன் அமைத்த சட்டங்களில் அவற்றுக்கு நிகராக எதுவும் இல்லை.

இளம் சந்ததியினரை நன்னெறிப்படுத்துவதற்காக இஸ்லாம் காட்டித்தந்துள்ள அடிப்படைகளும், உயர்ந்த வழிகாட்டல்களும் அவைகளில் உள்ளது தான்.

குழந்தைகளை சரியான முறையில் பயிற்றுவித்து வளர்த்தெடுத்தல் என்பது இஸ்லாம் உலகுக்கு வழங்கியுள்ள நன்னெறித்திட்டத்தின் ஒரு அங்கமாகும். இப்பகுதி மிகப் பெரியதும், முக்கியமானதுமாகும். மனித வாழ்க்கையின் மிக முக்கிய பருவங்களில் ஒன்றான சிறுபிராயத்துடன் இது தொடர்புபடுகின்றது என்ற வகையில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.

 சிறுவயது முதல் ஒரு மனிதனுக்கு சரியான பயிற்சி கிடைத்து விட்டால் அவன் ஒரு நல்ல மனிதனாகவும், சமூகத்தில் ஒரு சிறந்த சக்தியாகவும் மாறிவிடுகின்றான். இந்தப் பருவத்தில் மனிதனுக்குக் கிடைக்கின்ற பயிற்சியே அவனுடையவும், அந்தச் சமூகத்திடயவும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றது.

இதனால் தான் இஸ்லாம் குழந்தை வளர்ப்புக்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவம் கொடுக்கின்றது. ஏனெனில் ஒரு சிறுவன், சிறுவர் உலகின் ஒரு அங்கமாகவும், ஒரு குடும்பத்தின் உறுப்பினராகவும் கருதப்படுகின்றான். ஒரு குடும்பம் என்பது ஒரு சமூகத்தின் பிரிக்கமுடியாததொரு அங்கமாகும். இந்த அனைத்தும் சேர்ந்தே ஒரு உம்மத் ஆகும்.

சிறுவர்கள் விவகாரத்தில் இஸ்லாம் இந்த அளவு முக்கியத்துவம் கொடுப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவையாவன:

1.    மனிதனுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான பருவங்களில் ஒன்று இப்பருவம், அபாயங்கள்   நிறைந்த்தும் கூட.

2.    இளம்பருவத்தின் தன்மைகளும் இயல்புகளும்

3.    அதனுடைய தனித்துவங்கள்.

4.    ஆரோக்கியமானதொரு எதிர்காலத்திற்காக இப்பருவத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாடுகள். ஏனெனில், இப்பருவமே எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது.

எனவே, மனிதனுடைய ஆன்மீகம், லௌகீகம், பண்பாடு, உடல், உள மற்றும் அறிவுத்துறை போன்ற எல்லாத்துறைகளையும் உள்ளடக்கக் கூடிய முறையில் சிறார்களைச் சரியான முறையில் பயிற்றுவிப்பது பெற்றோர் மற்றும் பராமரிப்பாளர்கள் அனைவர்மீதும் உள்ள மிகப்பெரிய கடமையாகும்.

ஆகவே, இப்பாரிய பொறுப்பை மிகச் சரியான முறையில் ஒருவர் மேற்கொள்வதாயின் அவர் கீழ்வருவனவற்றைச் சரியாகத் தெரிந்திருப்பது மிகமிக அவசியமாகும்.

1.    இஸ்லாமிய நன்னெறிப்பயிற்சிக்குரிய அடிப்படைகள்.

2.    இப்பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டிய துறைகள்.

3.    இதற்குரிய சாதனங்களும், வழிமுறைகளும்.

இவ்வடிப்படைகள் பற்றி இன்று பயிற்றுவிப்பாளர்களான பெற்றார், ஆசிரியர்கள், அழைப்பாளர்கள் மத்தியில் காணப்படுகின்ற அறியாமை ஒரு இளம் சமூகத்தின் நெறிபிறழ்வுக்குப் பாரிய காரணமாக இருப்பதைப் பரவலாகக் காணமுடிகின்றது. தொடர்கின்ற இந்த அறியாமை ஒரு சமுகத்தின் எதிர்காலத்தை அதன் பாதாளத்திற்கு இட்டுச் சென்று கொண்டிருப்பதை இன்று பரவலாகக் காணமுடிகின்றது.

எனவே ஒரு குடும்பம், இஸ்லாமிய உம்மத் ஆகிய இரண்டினதும் கல்வி நிறுவனம் என்பவற்றின் அடிப்படையான உறுப்பினர் என்ற வகையில், தகப்பன், தாய், ஆசிரியர், மூத்த சகோதரன் போன்றோரும், இஸ்லாமிய அழைப்பாளர்களும் மேற்படி அடிப்படைகளைச் சிரியாக அறிந்து அவற்றை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமானதொரு சமுகத்தை நாம் உருவாக்க முடியும்.

அதேவேளை, சிறுவர்களுக்கான இஸ்லாமிய நன்னெறிப்பயிற்சி தொடர்பான நூற்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. அவ்வாறே இத்துறை சார்ந்த உரைகளும் மிக அரிதாகவே கிடைக்கின்றன. எனவே, நூல்களை எழுதுவதன் மூலமும், உரைகள் மற்றும் சிற்றேடுகள் முலமும் இத்துறைபற்றிய விழிப்புணர்வைப் பொதுவாக பெற்றோரிடமும், முதியவர்களிடமும் ஏற்படுத்துவது இஸ்லாமிய எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், சமூகக்காப்பாளர்கள் முரப்பீகள் போன்ரோர் மீதுள்ள மிகப்பெரிய கடமையாகும்.

எம்மைப் பற்றி

உரைகள்

தகவலிறக்கம்

ஆவணக் காப்பகம்

மென் பொருட்கள்