Text Box:
இஸ்லாமிய வழிகாட்டல் இணையத்தளம்   موقع دعوي إسلامي   Islamic Guidance Website   ඉස්ලාමීය මග පෙන්වීමේ වෙබ් අඩවිය

Unicode Fonts

News

Softwares

Text Box: © Moulaviyya  M.Y.  Maziyya B.A. (Hons)
Text Box: உள்ளே நுழைய முன் 
تمهيد ( إلى صفحات المرأة)...
மௌலவியா எம். வை. மஸிய்யா B.A. (Hons)

ஹதீஸ்                                      

இஸ்லாமிய வரலாறு

அழைப்புப் பணி

குடும்பவியல்

முஸ்லிம் பெண்

இஸ்லாமிய உலகம்

இஸ்லாம் அறிமுகம்

நவ முஸ்லிம்கள்

ஐயமும் தெளிவும்

நேர்காணல்

மருத்துவம்

நூலறிமுகம்

போட்டிகள்

 உரைகள்

 பொதுவானவை

 பரிபாசை

 

அனைத்தையும் சோடி சோடியாகப் படைத்த அல்லாஹ் மனிதனையும் ஆண், பெண் என இரு பாலாராகப் படைத்துள்ளான். இவ்வகையில் இஸ்லாத்தில் ஆணுக்குள்ள அத்தனை உரிமைகளும் கடமைகளும் பெண்ணுக்குமுண்டு. ஆணுக்குள்ள அத்தனை மதிப்பும் மரியாதையும் பெண்ணுக்குமுண்டு. அத்தனை மரியாதையும், சிறப்பும் அவளுக்குண்டு. மானிட சமூகத்தின் சரி பாதியான பெண்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள்.

 

சமூக அமைப்பில் பெண்களின் பங்கு முக்கியமானது என்ற அடிப்படையிற்தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் வாழ்வியல் தத்துவங்களையும் பெண்களுக்குப் போதிப்பதிலும், அவற்றைப் பெண்கள் மத்தியிற் பரப்புவதிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிக கவனம் செலுத்தினார்கள்.

 

பெண்களுக்கென்று தனியாக இஸ்லாமியப் போதனைகள், அறிவுரைகள் வழங்குவதிலும் கண்ணுங் கருத்துமாக இருந்தார்கள். இதற்குக் காரணம், பெண்கள் நெறிப்படுத்தப்பட்டால் ஒரு குடும்பம் நெறிப்படுத்தப்படும். ஒரு குடும்பம் நெறிப்படுத்தப்பட்டால் சமுதாயமே நெறிப்படுத்தப்படும் என்பதாகும்.

 

பெண்களின் மார்க்க அறிவை அதிகரித்தல், மார்க்க அடிப்படையான நடவடிக்கைகளை அவர்கள் மத்தியில் தூண்டி விடுதல், சமுதாயச் சீர் திருத்தத்தில் அவர்களது பங்களிப்புக்களை உணர்த்துதல் போன்றன அவசியமாகும். இது காலத்தின் தேவையென்றால் மிகையாகாது. இன்று தஃவாத் துறை சார்ந்த அனைத்துச் சாதனங்களின் ஊடாகவும், இஸ்லாமிய எழுச்சிக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

அந்த வகையில், பெண்களுடைய இஸ்லாமிய எழுச்சிக்காக எமது இணையத் தளத்திற் பெண்களுக்கென்று பிரத்தியேகமானதொரு பகுதியை ஒதுக்கி யுள்ளோம். இன்ஷா அல்லாஹ், அதில் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு அவசியமான அனைத்து அறிவுரைகளும் முன்மாதிரியான வழிமுறைகளும் தெளிவான சான்றுகளுடன் எழுதப்படவுள்ளன. அவற்றிலிருந்து நாமனைவரும் பயன் பெறுவது போலவே பிற பெண்களும் பயனடைய வழி செய்வோமாக!

 

 

எம்மைப் பற்றி

உரைகள்

தகவலிறக்கம்

ஆவணக் காப்பகம்

மென் பொருட்கள்