Text Box:
இஸ்லாமிய வழிகாட்டல் இணையத்தளம்   موقع دعوي إسلامي   Islamic Guidance Website   ඉස්ලාමීය මග පෙන්වීමේ වෙබ් අඩවිය

Unicode Fonts

News

Softwares

Text Box: © Moulaviyya  M.Y.  Maziyya B.A. (Hons)
Text Box: இஸ்லாம்—கிறிஸ்தவம் ஒப்பீடு — 1
الإسلام والمسيحية.
மௌலவியா எம். வை. மஸிய்யா B.A. (Hons)

ஹதீஸ்                                      

இஸ்லாமிய வரலாறு

பண்பாடுகள்

அழைப்புப் பணி

குடும்பவியல்

முஸ்லிம் பெண்

இஸ்லாமிய உலகம்

இஸ்லாம் அறிமுகம்

நவ முஸ்லிம்கள்

ஐயமும் தெளிவும்

நேர்காணல்

மருத்துவம்

நூலறிமுகம்

போட்டிகள்

 உரைகள்

 பொதுவானவை

 பரிபாசை

Text Box: Download  _PDF

 

ஆங்கில மூலம்   -    Simon  Alfredo Caraballo

தமிழில்   -  அதிரை அஹ்மத்

 

கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைக் கொள்கைகள் ஐந்தாகும். அவை:

 

1. புனிதத் திரித்துவம் (The holy Trinity)

2. ஏசுவின் கடவுள் தன்மை (The Divinity of Jesus)

3. கடவுளின் மகன் என்னும் ஏசுவுக்குள்ள தெய்வீகத் தன்மை (The Divine Sonship of Jesus)

4. இயற்கையான பாவத் தன்மை (The Original Sin)

5. மோட்சம் (The Atonement)

 

இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கைகள் ஆறாகும். அவை:

 

1. அல்லாஹ் ஒருவன்தான் வணக்கத்திற்குரியவன் என நம்புவது

2. அல்லாஹ்வின் அமரர்கள் என்ற ஆவித் தூதர்கள் இருக்கிறார்களென நம்புவது

3. இறைவனால் வழங்கப்பட்ட வேதங்களை நம்புவது

4. அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட மனிதத் தூதர்களை நம்புவது

5. உலக முடிவு நாள் உண்டென்று நம்புவது

6. நன்மை, தீமையின் முடிவும், தீர்ப்பும் அல்லாஹ்விடமே உண்டென்று நம்புவது

 

இஸ்லாத்தில் வணக்கத்திற்கு உரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே என்ற ஒருமைப்பாடும், அவனிடம் மட்டுமே உதவிகள் தேடப்பட வேண்டும் என்பதும் முஸ்லிம் ஒவ்வொருவரினதும் அடிப்படையான நம்பிக்கையாக இருக்க வேண்டும். கிறிஸ்தவத்தின், மூன்றில் ஒன்று அல்லது மூன்றும் இணைந்தது என்ற முக்கடவுள் கொள்கை (Triune Godship) இஸ்லாமியக் கடவுள் கொள்கைக்கு மாற்றமானதாகும். ஏசுவைக் கடவுளாக்குவது, மனிதனைப் பழைய காட்டிமிராண்டித் தனத்துக்குத் திருப்பிவிடுவதாகும் என்பது எனது ஆழ்ந்த ஆய்வுக்குப் பின்னர் கிடைத்த முடிவாகும்.

 

ஏசு, கடவுளின் மறு பிறப்பானவர் (அவதாரம்) அல்லர்; இறைவனின் அடியாரும் இறைத் தூதருமாவார்; தூதர்களுள் மற்றவர்களைப் போன்று அவரும் எல்லா விதங்களிலும் மனிதரும், மனிதத் தன்மையும் உடையவராவார்; அவர் கடவுளின் மகனுமல்லர் என்று இஸ்லாம் உறுதியாகக் கூறுவது மறுக்க முடியாத உண்மையாகும். இதுபோன்றே மனிதன் பிறக்கும்போதே பாவத்துடன் பிறக்கிறான் என்று கிறிஸ்தவம் கூறுவதையும் மற்றவர்களுக்காக ஏசு இரத்தம் சிந்தினார் என்பதையும், மனிதருக்கு மனிதர் பாவ மீட்சி தர முடியும் என்பதையும் இஸ்லாம் வன்மையாக மறுத்துரைக்கிறது.

 

புனிதத் திரித்துவம் (The Holy Trinity

கடவுளிடத்தில் தெய்வீகத் தன்மை கொண்ட மூவர் இருக்கின்றனர் என்று இக்கொள்கை வலியுறுத்துகின்றது. அவர்கள் முறையே, தேவனான கடவுள், தேவனின் மகன், பரிசுத்த ஆவி ஆகியவையாகும். ஏசுவின் மீதிருந்த நேசத்தின் காரணமாக அன்னாரின் வாழ்க்கையை அலசி ஆராய்ந்துள்ளேன். ஆனால், ஓரிடத்தில் கூட இந்தத் திரித்துவத்தைப் பற்றி ஏசு ஒருபோதும் கூறவேயில்லை. முக்கடவுட் கொள்கையைப் பற்றியும், சூசகமாகக்கூடக் குறிப்பிடவேயில்லை. புனிதத் தூதர் ஈஸா (அன்னாரை அல்லாஹ் அனைத்து அழுக்குகளை விட்டும் தூய்மைப் படுத்துவானாக.) அவர்களின் கடவுட் கொள்கையானது அவர்களைப் போன்ற தூதர்கள் கூறியதற்குச் சற்றும் மாற்றமில்லாததாகும். அவர்கள் அனைவருமே ஓரிறைக் கொள்கையையே போதனை செய்தார்கள்; திரித்துவத்தை யன்று.

 

ஈஸா (அலை) அவர்கள் தமக்கு முன்னால் வந்து சென்ற தூதர்கள் போதித்ததை உறுதிப்படுத்தினார்கள். இதற்குச் சான்று மார்க்கின் சுவிசேசத்திலேயே உண்டு. இந்தக் கருத்து வேறுபாட்டை அறிந்த ஏசுவின் சீடரொருவர் இதுபற்றி ஏசு சரியாக பதில் கூறுகின்றாரா என்றறிய ஏசுவை நெருங்கி நின்று கேட்டார். உங்கள் போதனைகளுள் தலையாயது எது. அதற்கு ஏசு பதில் கூறினார், கேட்டுக்கொள் இஸ்ராயீலே, எனது போதனைகளுள் தலையாயது நம் கடவுள் ஒரே கடவுள்தான்; உனது இதயபூர்வமாக அந்தக் கடவுளை நீ நேசிக்க வேண்டும்; உன் ஆன்மாவில் அவரே நிறைந்திருக்க வேண்டும்; உன் மனதிலும் அவர் நினைவுதான் நிறைந்திருக்க வேண்டும்; உன் வலிமையிலும் அவர்தான் நிறைந்திருக்க வேண்டும்; இதுதான் எனது முதலும் தலையாயதுமான போதனையாகும் (மார்க் 12: 28-30). பைபிளிலுள்ள இன்னொரு சான்று ஏசு ஒரே கடவுளைத்தான் நம்பினார்; ஒருவரில் மூவரல்ல என்பதுவே. இதோ அதற்குச் சான்று, தேவனான உன் கடவுளையே நீ வணங்க வேண்டும்; அவருக்கே நீ சேவகம் புரிய வேண்டும் (மத்தேயு 4: 10).

 

திரித்துவக் கொள்கையானது, ஏசு பெருமான் இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்று முன்னூறு ஆண்டுகளின் பின் உருவெடுத்ததாகும். அது மட்டுமன்று, கிறிஸ்தவத் திருச் சபையால் ஒப்புக் கொள்ளப்பட்ட நான்கு சுவிஷேசங்களுள் ஒன்றில் கூட, திரித்துவத்தைப் பற்றிய குறிப்பில்லை. ஏசுவோ, அவருடைய சீடர்களோ, தொடக்க காலக் கிறிஸ்தவ அறிஞர்களோ, கிறிஸ்துவைப் பின்பற்றியவர்களோ இந்தத் திரித்துவத்தைப் போதிக்கவில்லை. இது எப்படித் தோன்றியது தெரியுமா? ஏசு பெருமான் மறைந்து முன்னூறு ஆண்டுகளின் பின் ஏற்படுத்தப்பட்ட Nicean Council என்ற கிறிஸ்தவ உயர்மட்டக் குழுவில், பல கருத்து மோதல்களுக்குப் பின் ‘திரித்துவம்’ என்ற புதுக் கொள்கை தோன்றிற்று.

 

எத்தகைய உயர்மட்டக் குழுவால் தீர்மானிக்கப்பட்டிருப்பினும், முறையாகச் சிந்தித்துணர்வோர் யாரும் இதனை அறிவுக்குப் பொருந்தாததாகவே கருதுவர். ஏனெனில், இக்கொள்கையானது நிலையற்ற அல்லது நிலையான தெய்வீகத் தன்மையுடைய மூன்று பேர் மீது நம்பிக்கை கொள்வதாகும். நிலையான தெய்வீகத் தன்மையென்ற அடிப்படையில் சிந்திப்போமானால், நிலையான மூன்று பேர், எங்கும் நிறைந்துள்ள நிலையான மூவர். இவ்வடிப்படையில் மூன்று கடவுள்கள். அப்படித்தானே? அவ்வாறின்றி நிலையற்ற மூன்றென்றால், தேவனோ, அல்லது தேவனின் மகனோ, அல்லது பரிசுத்த ஆவியோ கடவுளாக முடியாது. இது ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் நான் எடுத்த முடிவு.

 

மாறாக, இஸ்லாமிய மார்க்கம் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே என்ற இலகுவான கடவுட் கொள்கையை வலியுறுத்துகின்றது. அந்த அல்லாஹ்வுக்குத் துணையாக தெய்வீகத் தன்மையில் உதவி செய்வோர் ஒருவரும் இலர் என்பதை உறுதி செய்கிறது. படைப்பினங்கள் அனைத்தும் அவனுடைய ஆதரவை எதிர்பார்த்தே இருக்கின்றன. அவன் யாருடைய தேவையும் அற்றவன். எனவே, அவன் முழுமை பெற்றவன். அவன் யாரையும் பெறவுமில்லை. யாராலும் பெற்றெடுக்கப்படவுமில்லை. அவனிடமிருந்து அவனுக்கு இணையாகவோ, அவனுக்குத் துணையாகவோ வேறொன்றும் பிறந்து வராது.

 

திரித்துவத்திற்குரிய ஒரே சான்றாக பைபிளில் இருந்த யோவானின் கடிதங்கள் (அத்தியாயம் 5: வசனம் 7) என்ற பகுதி பைபிளின் King James Version பதிப்பின் New Standard Revised Edition இலிருந்து, அது சிலரின் கையாடல் என்ற காரணத்தால் நீக்கப்பட்டது.1

 

அடிக்குறிப்புக்கள்

 

1. Onness of God, the Ultimate Solution to the Trinitarian Controversy’, by Marmarinta-Umar P. Mababaya, 1999, International Islamic Publishing House, p. 43.

எம்மைப் பற்றி

உரைகள்

தகவலிறக்கம்

ஆவணக் காப்பகம்

மென் பொருட்கள்