Text Box:
இஸ்லாமிய வழிகாட்டல் இணையத்தளம்   موقع دعوي إسلامي   Islamic Guidance Website   ඉස්ලාමීය මග පෙන්වීමේ වෙබ් අඩවිය

Unicode Fonts

News

Softwares

Text Box: © Moulaviyya  M.Y.  Maziyya B.A. (Hons)
Text Box: மிஃராஜ் இரவு
حكم الاحتفال لبليلة المعراج؟
மௌலவி முஜீபுர்ரஹ்மான் உமரி

ஹதீஸ்                                      

நவ முஸ்லிம்கள்

ஐயமும் தெளிவும்

நேர்காணல்

மருத்துவம்

நூலறிமுகம்

போட்டிகள்

 உரைகள்

 பொதுவானவை

 பரிபாசை

 

        கேள்வி:    ரஜப் மாதம் 27-ம் நாள் இரவு சிறப்பு வணக்க, வழிபாடுகள் செய்கின்றார்களே! இதற்கு மார்க்கத்தில் ஆதாரம் உண்டா? விளக்கம் தரவும்.               -அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி கொடுப்பானாக!

                பதில்:     ரஜப் மாத 27-ம் இரவை மிஃராஜ் இரவு என்று எண்ணி, அன்றய இரவில் அதிக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதோடு, சிலர் விழாவாகவும் கொண்டாடுகிறார்கள்.

               மிஃராஜ்- நபி (ஸல்) அவர்கள், வானதிற்கு மிகக்குறைந்த நேரத்தில் சென்று, சொர்க்க, நரகம் காண்பிக்கப்பட்டு, தொழுகைக் கடமையையும் பெற்றுக் கொண்டு திரும்பிய-  நிகழ்ச்சி பற்றி அல்குர்ஆனிலும் ஆதாரபூர்வமான நபிமொழிகளிலும் கூறப்பட்டுள்ளது. அதனை நம்புவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும்.

 

ஆனால் இந்த பயணம் எந்த வருடத்தில், எந்த இரவில் நிகழ்ந்தது என்பதற்கு தெளிவான எந்த ஆதாரமும் கிடையாது. எனவே மிஃராஜ் என்று ஒரு நிகழ்ச்சி நடந்தது என்று நாம் நம்பவேண்டுமே தவிர, அது ரஜப் 27-ம் இரவில்தான் நடந்தது என்று நம்புவது ஆதாரமற்ற நம்பிக்கையாகும்.

               சரி! ரஜப் 27-ம் இரவுதான் மிஃராஜ் நிகழ்ந்தது என்று – ஒரு வாதத்திற்காக – வைத்துக் கொண்டாலும் அன்றய தினம் சிறப்பு வணக்கங்கள் செய்வதற்கு மார்க்கத்தில் ஏதேனும் ஆதாரம் உண்டா? நிச்சயமாக் கிடையாது. வணக்கத்திற்கென குறிப்பிட்ட ஒரு நாளை நிர்ணயிப்பதற்கு நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் அவசியமாகும். மிஃராஜ் எந்த நாளில் நடந்தது என்பதே செரியாத போது அன்றய தின வழிபாடு பற்றி நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் எவ்வாறு இருக்கமுடியும் ?

 

              மிஃராஜ், ரஜப் 27-ம் இரவுதான் நிகழ்ந்தது என்றும் அன்றய இரவில் அதிக வணக்கங்களில் ஈடுபடவேண்டும் என்றும் எண்ணி நம்மில் பலர் செயல்படுவது உண்மையிலேயே நன்மைதரும் செயல் என்றால், இதனை நபி (ஸல்) அவர்கள் செய்திருப்பார்கள். நபித்தோழர்களும் கடைப்பிடித்திருப்பார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள்  இந்த இரவைப்பற்றி கூறியதாகவோ, நபித்தோழர்கள் அன்றய தினம் இபாதத்தில் ஈடுபட்டதாகவோ எந்த ஆதாரமும் இல்லை. நன்மையில் போட்டிபோடக் கூடிய நபித்தோழர்கள் இந்த இரவில் சிறப்பு இபாதத் இருந்திருந்தால் செய்திருக்க மாட்டர்களா?

              ஆகவே மிஃராஜ் நிகழ்ச்சி நடந்தது உண்மை. அது எந்த நாளில் நடந்தது என்பது நமக்கு தெரியாது. அன்றய தினம் எந்த சிறப்பு வணக்கங்களும் கிடையாது. இதனை நபி (ஸல்) அவர்களோ, அவர்களின் தோழர்களோ செய்யவில்லை. எனவே ரஜப் 27-ம் இரவு மிஃராஜ் வழிபாடு மார்க்கத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட செயலாகும். இதனை விட்டும் நாம் முற்றிலும் தவிர்ந்து கொள்ளவேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் மார்க்கமாக நமக்கு காட்டித்தராத அனைத்துச் செய்களும் பித்அத்- மார்க்கத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட- செயலாகும். மார்க்கத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட செயல்கள் அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்படாது நிராகரிக்கப்படும். அதற்கென அல்லாஹ்விடம் எந்தக் கூலியும் கிடைக்காததோடு, அந்தச் செயலுக்காக் தண்டனையும் கிடைக்கும்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

             யார் நம்முடைய இந்த – மார்க்க- விஷயத்தில் அதில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகின்றாரோ அது மறுக்கப்பட்டு விடும். –மற்றொரு ஹதீஸில்- யார் நமது கட்டளையில்லாத ஒரு செயலைச் செய்கிறாரோ அது – அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்படாது- மறுகப்பட்டுவிடும்.

                                                                 (ஆதார நூல்: புகாரி, முஸ்லிம்)

              நிச்சயமாக சிறந்த வார்த்தை அல்லாஹ்வுடைய வேதமாகும். சிறந்த வழி நபி (ஸல்) அவர்களின் வழியேயாகும். மார்க்கத்தில் புதிதாக ஏற்படுத்தப்படும் செயலே மிகக் கெட்ட செயலாகும். மார்க்கத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட அனைத்துச் செயலும் வழிகேடாகும்.

                                                                              (ஆதார நூல்: முஸ்லிம்)

 எனவே பித்அத்தான அனைத்து செயல்களை விட்டும் நீங்கி,  அல்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழியின் அடிப்படையில் நமது வாழ்க்கையை அமைத்து ஈருலகிலும் வெற்றி பெறுவோமாக!

 

 

 

 

 

 

 

 

எம்மைப் பற்றி

உரைகள்

தகவலிறக்கம்

ஆவணக் காப்பகம்

மென் பொருட்கள்